பாரத ரத்னா விருதை பெற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி..!

பாரத ரத்னா விருதை பெற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி..!
பாரத ரத்னா விருதை பெற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி..!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணி செய்ததற்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அத்துடன் பூபென் ஹசாரிகா மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளும் இன்று வழங்கப்பட்டது. பூபென் ஹசாரிகாவின் மகன் அவர் சார்பில் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com