\
வாஜ்பாய் மறைவுக்கு மத்திய அரசு 7 நாள் துக்கம்

வாஜ்பாய் மறைவுக்கு மத்திய அரசு 7 நாள் துக்கம்

வாஜ்பாய் மறைவுக்கு மத்திய அரசு 7 நாள் துக்கம்
Published on

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதென எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வாஜ்பாய் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இந்திய நேரப்படி, மாலை 5.05க்கு பிரிந்தது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 22ஆம் தேதிவரை அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com