வாஜ்பாய் பிறந்தநாள்: டெல்லி நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மரியாதை

வாஜ்பாய் பிறந்தநாள்: டெல்லி நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மரியாதை
வாஜ்பாய் பிறந்தநாள்: டெல்லி நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் பாஜகவின் முக்கிய முகமாகவும் பார்க்கப்படுபவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய். 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய் 9 முறை மக்களவை எம்.பியாகவும், இரண்டு முறை மாநிலங்களவை எம்.பியாகவும் இருந்துள்ளார்.

மேலும், மூன்றுமுறை இந்திய பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியை தேசிய நல்லிணக்க நாளாக பாஜக அரசு சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் வாஜ்பாய் நினைவிடம் அமைந்துள்ள ”சதைவ் அதல்” பகுதிக்கு இன்று காலையிலேயே சென்று பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தி வணங்கினர்.

#AtalBihariVajpayee birth anniversary: PM #NarendraModi to interact with farmers today. India Today's @Rahulshrivstv brings us more | #ITVideo pic.twitter.com/mwfMdB4Dt9
— IndiaToday (@IndiaToday) December 25, 2020

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com