மிஸ் இந்தியா யுனிவர்ஸ் தாக்கப்பட்ட விவகாரம்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

மிஸ் இந்தியா யுனிவர்ஸ் தாக்கப்பட்ட விவகாரம்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

மிஸ் இந்தியா யுனிவர்ஸ் தாக்கப்பட்ட விவகாரம்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர், உஷோஷி சென்குப்தா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், வேலை முடிந்து சகப் பணியாளருடன் நள்ளிரவில், ஊபர் கால் டாக்சியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த வாகனத்தை இடிப்பது போல, 7 இளைஞர்கள் பைக்கில் வந்தனர். அவர்கள் காரை வழிமறித்து நிறுத்தினர். டிரைவரை இழுத்துப்போட்டு அடித்தனர். அதை உஷோஷி, வீடியோ எடுத்தார். 

பின்னரும் காரை பின் தொடர்ந்து வந்த அந்த இளைஞர்கள், உஷோஷியின் வீட்டருகே வந்து, அந்த வீடியோவை அழிக்கும்படி கூறி தொல்லை கொடுத்தனர். அவரை மானபங்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை அடுத்து, அவர்கள் தப்பினர். 

இதுபற்றி பேஸ்புக்கில் பதிவிட்ட உஷோஷி, போலீசிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் சம்பவம் நடந்த இடம் தங்கள் ஏரியாவுக்குள் வரவில்லை என்று கூறி, உதவி செய்ய மறுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். முதலில் மைதான் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் உதவி கேட்டதாகவும், பின்னர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள சாரு மார்க்கெட் போலீசில் புகார் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். தாமதமாக போலீசார் வந்த போது அவர்கள், போலீசாரை தள்ளி விட்டுத் தப்பியோடியதாகவும் தெரிவித்திருந்தார். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால் என்றும் நாங்கள் துன்புறுத்தப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தச் செயலில் ஈடுபட்ட, ஷேக் ராகிட், பர்தின் கான், சபீர் அலி, இம்ரான் அலி, வாசிம், கனி, ஆசிப் கான் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில், சாரு மார்க்கெட் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பியூஸ் பால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் காவலர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com