Former Kerala CM Pinarayi Vijayan Moves Into Rented House
Pinarayi Vijayan web

கேரளா | தேர்தலில் தோல்வி.. வாடகை வீட்டில் குடியேறிய பினராயி விஜயன்!

தேர்தல் தோல்விக்குப் பின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்து, திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு அருகே வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார், பினராயி விஜயன்.
Published on

கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவின் முதல்வராகப் பதவி வகித்த பினராயி விஜயன், தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, பதவியிலிருந்து விலகியதால், திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். புதிய அரசு பொறுப்பேற்கும் வரை தற்காலிக முதல்வராகத் தொடரும் அவர், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தைக் காலி செய்துவிட்டு, பேக்கரி சந்திப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு மாறியுள்ளார்.

Pinarayi Vijayan Says on BJP Victory in Kerala Elections
பினராயி விஜயன்pt web

முன்னதாக, அவர் கட்சி குடியிருப்பிற்கு மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாடகை இல்லத்தைத் தேர்வு செய்துள்ளார். கேரளாவில் வெற்றிபெற்ற ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் கட்சி முதல்வர் யார் என்று தேர்வு செய்வதில் இழுபறி நிலவுகிறது. எனவே, மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்வதும் தாமதம் ஆகிறது. ஒருவேளை பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அவருக்கு அந்தப் பதவிக்கான அரசு குடியிருப்பு வழங்கப்படும்.

Former Kerala CM Pinarayi Vijayan Moves Into Rented House
கேரளா | முதல்வர் ரேஸில் 3 பேர்.. முடிவு ராகுல் கையில்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com