former karnataka ex police dgp dies of stab wounds
ஓம் பிரகாஷ்எக்ஸ் தளம்

கர்நாடகா | முன்னாள் டிஜிபி கத்திக்குத்துடன் மரணம்.. விசாரணையில் மகன் சொன்ன பகீர் தகவல்!

கர்நாடகாவின் முன்னாள் டிஜிபி ஒருவர் தனது மனைவியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

1981-ஆம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியான ஓம் பிரகாஷ், 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்த நிலையில், முன்னாள் டிஜிபியான 68 வயதான ஓம் பிரகாஷ், நேற்று பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அவரது வயிறு மற்றும் மார்பில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

இந்த சம்பவம் பற்றி பிரகாஷின் மகன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், அவரது மனைவிதான் முக்கிய சந்தேக நபர் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவரும், அவரது மகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி பிரகாஷின் மகன் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

former karnataka ex police dgp dies of stab wounds
ஓம் பிரகாஷ் குடும்பம்x page

இதுகுறித்து ஓம் பிரகாஷின் மகன் கார்த்திகேஷ், “எனது அம்மா பல்லவி, கடந்த ஒரு வாரமாக என் தந்தையை கொலை செய்வதாக மிரட்டி வந்தார். என் அம்மா பல்லவியும், என் சகோதரி கிருதியும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடிக்கடி என் தந்தையுடன் சண்டையிடுவார்கள். என் தந்தையின் கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று நான் உறுதியாக சந்தேகிக்கிறேன். இந்த சம்பவம் நடந்தபோது நான் வெளியூரில் இருந்தேன். பக்கத்து வீட்டுக்காரர் சொன்னபிறகே நான் விரைந்து வந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

former karnataka ex police dgp dies of stab wounds
கர்நாடகா | தேர்வின்போது பூணூல் அகற்றிய விவகாரம்.. இரண்டு பேர் பணியிடை நீக்கம்!

முதற்கட்ட விசாரணையில், பல்லவி ஓம் பிரகாஷின் மீது மிளகாய்ப் பொடியை வீசி, கட்டிவைத்து, கண்ணாடி பாட்டிலால் தாக்கி, குத்திக் கொன்றதாகத் தெரிய வந்துள்ளது. அவரைக் குத்திக் கொன்ற பிறகு, அவரது மனைவி மற்றொரு போலீஸ்காரரின் மனைவியிடம் தனது கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் டிஜிபிக்கும் அவரது மனைவிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அது உடல்ரீதியான மோதலாக மாறி கொலைக்கு வழிவகுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொலையில் அவர்களின் மகள் கிருதிக்கு பங்கு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

former karnataka ex police dgp dies of stab wounds
ஓம் பிரகாஷ்x page

கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, "ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவிதான் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்பது முதற்கட்டத் தகவல்களால் தெரியவந்துள்ளது, ஆனால் அது விசாரணையில் உள்ளது. நாம் காத்திருக்க வேண்டும். 2015-ல் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது அவர் என்னுடன் பணியாற்றினார், அவர் ஒரு நல்ல அதிகாரி மற்றும் நல்ல மனிதர். இது நடந்திருக்கக்கூடாது. விசாரணையில் எல்லாம் வெளிப்படும்" என்றார்.

former karnataka ex police dgp dies of stab wounds
கர்நாடகா | தேர்வின்போது பூணூல் அகற்றிய விவகாரம்.. இரண்டு பேர் பணியிடை நீக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com