கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா பாஜகவில் இருந்து நீக்கம்

கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பாஜகவைச் சேர்ந்த ஈஸ்வரப்பாவை பாஜக மேலிடம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்வரப்பா
ஈஸ்வரப்பா file image

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு பாஜக மேலிடம் சீட் வழங்கியது.

LokSabhaElection
BJP
LokSabhaElection BJPpt desk

இந்நிலையில், தனக்கு அந்த தொகுதியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ஈஸ்வரப்பா, ஏமாற்றமடைந்ததால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஷிவ்மோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்வரப்பா
சூரத்| 8 பேர் வாபஸ்.. காங்கிரஸ் மனு நிராகரிப்பு.. போட்டியின்றி வெற்றிபெற்ற முதல் பாஜக வேட்பாளர்!

இந்நிலையில், ஈஸ்வரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய பாஜக மேலிடம் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com