SM.Krishnapt desk
இந்தியா
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா (91), கடந்த 1998 - 2004 ஆம் ஆண்டுகளில் கர்நாடக மாநில முதல்வராகவும், பின் மன்மோகன் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர், கடந்தாண்டு அரசியல் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
SM.Krishnapt desk
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெங்களூரு பழைய விமான நிலையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.