மேற்கு வங்க வன்முறை விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம்

மேற்கு வங்க வன்முறை விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம்
மேற்கு வங்க வன்முறை விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம்

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைருக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட சுமார் 150 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து மேற்கு வங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்பட சுமார் 150 பேர் கடிதம் எழுதியுள்ளனர். 

அந்தக் கடிதத்தில், ''மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் நடைபெறும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தனிநபா்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன. அங்கு நடைபெற்று வரும் அரசியல் கொலைகள், வன்முறை சம்பவங்களுக்கு எதிராக உள்ளூர் நிா்வாகமும் காவல்துறையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதிய அளவில் இல்லை.

தேர்தலுக்குப் பின்னா் நடைபெற்ற 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களில் பெண்கள் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். 4,000 முதல் 5,000 பேர் வரை அசாம், ஜார்க்கண்ட், ஒடிஸா மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பண்பாட்டின் மீது நடத்தப்படும் பலமான தாக்குதலாகும். இந்தச் சம்பவங்கள் தொடா்பான வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நாடு முழுவதிலும் இருந்து 2,093 பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com