‘இதயத்தில் இருக்கிறது இந்தியா ’ - வைரலாகும் வாசிம் ஜாபரின் குடியரசு தின வாழ்த்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் குடியரசு தினத்தை முன்னிட்டு பகிர்ந்திருந்த ட்விட்டர் போஸ்ட் வாழ்த்து வைரலாகியுள்ளது. இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1944 ரன்களை குவித்துள்ளார். ஜாபர் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து சொல்லியுள்ள நிலையில் அவரது போஸ்ட் வைரலானது ஏன்?
இனிய குடியரசு நாள் மற்றும் குடியரசு நாள் என்ற ஹேஷ்டேக்கை கேப்ஷனாக போட்டு அதோடு மீம்ஸ் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். ஒன்றின் கீழ் ஒன்றாக மூன்று படங்கள் இடம்பெற்றுள்ள அந்த மீம்ஸில் சிறுவன் ஒருவன் “பிரேசில் எங்குள்ளது?, பிரான்ஸ் எங்குள்ளது?” என்பது மாதிரியான கேள்விகளுக்கு உலக வரைப்படத்தில் அந்த நாடுகள் உள்ள இடத்தை சுட்டிக்காட்டுகிறான். அதே சிறுவனிடம் ‘இந்தியா எங்குள்ளது?’ என்றதும் தனது வலது கையால் தனது நெஞ்சை அணைத்து ‘நெஞ்சாங்கூட்டில்’ உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறான்.
இது தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. வாசிம் ஜாபரை தவிர கோலி, சச்சின் மாதிரியான வீரர்களும் குடியரசு தின வாழ்த்து சொல்லி உள்ளனர்.