தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹரியானா காங்.முன்னாள் தலைவர் ராஜினாமா!

தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹரியானா காங்.முன்னாள் தலைவர் ராஜினாமா!
தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹரியானா காங்.முன்னாள் தலைவர் ராஜினாமா!

ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் தன்வர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நான்கு பக்க ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதை ட்விட் செய்து ள்ள அசோக் தன்வர், ‘தொண்டர்களுடன் நடத்திய நீண்ட யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் ஏன் ராஜினாமா செய்கிறேன் என்பது கட்சிக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும்’’ என்று தெரிவித்துள்ளார்.  ‘கட்சி இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறது. இதற்கு அரசியல் எதிரிகள் காரணமல்ல, உட்கட்சி முரண்பாடுதான் காரணம்’ என்றும் கூறி யுள்ளார்.

ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில், எம்.எல்.ஏ. சீட் ரூ.5 கோடிக்கு பேரம் பேசப்படுவதாகப் புகார் கூறியிருந்த  அசோக் தன்வர், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டின் முன் கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தனது எதிர்ப்புக்கு பலன் இல்லாததால், கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் ராஜினாமா செய்துள்ளதாக தெரி வித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com