பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு புதிய அதிகாரியாக குஜராத் முன்னாள் டிஜிபி நியமனம்!

பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு புதிய அதிகாரியாக குஜராத் முன்னாள் டிஜிபி நியமனம்!
பி.சி.சி.ஐ-யின்  ஊழல் தடுப்புப் பிரிவு புதிய அதிகாரியாக குஜராத் முன்னாள் டிஜிபி நியமனம்!

குஜராத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி காந்த்வாலா, பிசிசிஐ-யின் புதிய ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராக, குஜராத் மாநில முன்னாள் டிஜிபி சபீர் ஹூசைன் காந்த்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த அஜித் சிங் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் ஓய்வுபெற்ற நிலையில், காந்த்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து காந்த்வாலா கூறுகையில், "உலகின் சிறந்த கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ.யின் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பது ஒரு பெரிய மரியாதைக்குரிய விஷயம். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணியில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுவேன்’’ என்று கூறினார்.

2010-ஆம் ஆண்டு காவல்துறையிலிருந்து ஓய்வுபெற்ற காந்த்வாலா, மத்திய அரசின் லோக்பால் தேடுதல் குழுவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com