\
வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
Published on

டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதென எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வாஜ்பாய் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இந்திய நேரப்படி, மாலை 5.05க்கு பிரிந்தது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவிற்காக மத்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கின்றது. அத்துடன் நாளை மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க்கில் உள்ள இல்லத்தில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் வந்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அமித்ஷா அஞ்சலி செலுத்தினர். அத்துடன் பாஜக மூத்த தலைவர் அத்வானி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் உடலுக்கு மரியாதை செய்யும் வகையில், அவர் உடல்மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது. வாஜ்பாய் புகழாரம் சூட்டிய மோடி, விலைமதிப்பற்ற ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது என தெரிவித்தார். வாஜ்பாய் மறைவால் பேச வார்த்தைகள் இன்றி நிற்கிறோம் என்று கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com