“உங்களாலும், உங்கள் பிள்ளைகளாலும் நான் புண்பட்டேன்” - ராஜினாமா கடிதத்தில் அமரிந்தர் சிங்!

“உங்களாலும், உங்கள் பிள்ளைகளாலும் நான் புண்பட்டேன்” - ராஜினாமா கடிதத்தில் அமரிந்தர் சிங்!
“உங்களாலும், உங்கள் பிள்ளைகளாலும் நான் புண்பட்டேன்” - ராஜினாமா கடிதத்தில் அமரிந்தர் சிங்!

கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய கேப்டன் அமரிந்தர் சிங், தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கி கொள்வதாக தேரவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் அனுப்பியுள்ளார். 

“கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்னதாக பொது வாழ்வில் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். ராணுவத்தில் பணியாற்றிவிட்டு திரும்பிய கையோடு மக்கள் பணிக்கு வந்திருந்தேன். காங்கிரஸ் சார்பில் 1980-இல் பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்டு லோக்சபா உறுப்பினரானேன். 1984 பொற்கோவில் தாக்குதலுக்கு பிறகு எனது எம்.பி பதவி மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினேன். பின்னர் மீண்டும் 1997-இல் இணைந்தேன்.

தொடர்ந்து 1999 வாக்கில் பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டேன். அந்த பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டேன். 2002 முதல் 2007 வரை பஞ்சாப் மாநில முதல்வராக செயல்பட்டேன். 2014 லோக் சபா தேர்தலில் உங்கள் கோரிக்கையை ஏற்று அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

பின்னர் மீண்டும் பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக பணியாற்றி 2017 தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் கட்சி ஆட்சி அமைக்க துணை நின்றேன். அதோடு 2017 தொடங்கி 4 ஆண்டுகள் மற்றும் ஆறு மாத காலம் மாநில மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வந்தேன். 

காங்கிரஸ் கட்சி 2017 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 92 சதவிகிதம் நிறைவேற்றி இருந்தேன். ஆனால் எனது மற்றும் கட்சியின் பஞ்சாப் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கருத்தில் கொள்ளாமல் நவ்ஜோத் சிங் சித்துவை பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்தீர்கள். காங்கிரஸ் பின்புலம் இல்லாத எதிர்க்கட்சியுடன் 14 ஆண்டுகள் பயணித்த ஒருவருக்கு நீங்கள் பொறுப்பை கொடுத்தீர்கள். அது எனக்கு காங்கிரஸ் எந்த பாதையில் செல்கிறது என்பதற்கான புரிதலை கொடுக்கவில்லை. 

அதே நேரத்தில் நீங்களும், உங்களது பிள்ளைகளும் (சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி) என்னை நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை கொடுத்தது. அதனால் நான் மனதளவில் புண்பட்டேன். இந்த கடிதத்தின் மூலம் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். இது என் மாநிலத்தின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் நான் எடுத்துள்ள முடிவு” என ஏழு பக்க ராஜினாமா கடிதத்தில் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகியுள்ள நிலையில் ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com