\
அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் : எக்மோ கருவி பொருத்தம்?

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் : எக்மோ கருவி பொருத்தம்?

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் : எக்மோ கருவி பொருத்தம்?
Published on

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலையில் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே அவரை மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. அருண் ஜெட்லிக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பூடான் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பிரதமர் மோடி, அருண் ஜெட்லியை காண எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com