முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கைதால் பரபரப்பில் ஆந்திர மாநிலம் - வழக்கின் பின்னணி என்ன?

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்தது ஆந்திராவில் பரபரப்பு பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்.
chandrababu naidu
chandrababu naidupt desk
Published on

ரூ.240 கோடி முறைகேடு எனப் புகார்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.3,350 கோடி திட்டத்துக்கு 2015 ஆம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்காக ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் மாநில அரசு 10 சதவீத பங்கை செலுத்த வேண்டும். ஆனால், மாநில அரசின் பங்குத் தொகையில் ரூ.240 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலி பில் மற்றும் இன்வாய்ஸ்கள் மூலம் ஜிஎஸ்டி-யை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

chandrababu naidu
chandrababu naidupt desk

ஜூலை 2021-ல் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு

இதனிடையே, ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு வழக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திறன் மேம்பாட்டுக் கழகத் தலைவர் கோண்டுரு அஜய் ரெட்டி ஆந்திர சிஐடியில் புகார் அளித்தார். இதனையடுத்து திறன் மேம்பாட்டு கழக முன்னாள் தலைவர் இயக்குனர் உட்பட பலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநில அரசின் சார்பில் ஜூலை 2021-ல் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த சிஐடி அறிக்கையின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் நிதி பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தியது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் விசாரணை

இந்த வழக்கில், திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் எம்டி மற்றும் சிஇஓ காந்தா சுப்பாராவ், இயக்குநர் கே.லட்சுமி நாராயணா உள்ளிட்ட 26 பேர் மீது சிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நாராயணனிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஏனெனில் லட்சுமி நாராயணா சந்திரபாபுவிடம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர். ஓய்வுக்குப் பிறகு, ஆந்திர அரசின் ஆலோசகராகவும் பணியாற்றினார். ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முதல் இயக்குநராகவும் பணியாற்றினார்.

lakshmi narayana
lakshmi narayanapt desk

சிஐடி அதிரடி சோதனை

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி மையங்களில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் லட்சுமி நாராயணன் வீட்டிலும் சிஐடி சோதனை நடத்தப்பட்டது. இந்த திறன் மேம்பாட்டு வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையில் முக்கிய புள்ளிகளை சிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜூன் 2015-ல் திறன் மேம்பாட்டுக் கழகம் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகளைக் கண்டறிந்தது.

ஊழலை உறுதி செய்து சிஐடி அறிக்கை

அரசானை எண் 4 இன் படி, சீமென்ஸ் எம்.டி சௌம்யாத்ரி சேகர் போஸ் மற்றும் டிசைன் டெக் எம்.டி விகாஸ் கன்வில்கர் ஆகியோருக்கு சந்திரபாபு அரசால் ரூ.241 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பணம் 7 ஷெல் நிறுவனங்களுக்கு தவறான விலைப்பட்டியல் மூலம் நிதி மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

chandrababa naidu arrest
chandrababa naidu arrestpt desk

மேலும், இந்தத் திட்டத்துக்கான செலவை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே பகிர்ந்தளிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஐ.டி. 2017-18-ல் .ரூ.371 கோடியில் ரூ.241 கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஐடி ரிமாண்ட் அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த காலங்களில் சிஐடி வழக்குகளை பதிவு செய்த 26 பேருக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்று நடந்தது என்ன?

நந்தியாலாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு, ஆர்.கே.நகரில் உள்ள விழா அரங்கில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு, டிஐஜி ரகுராமி ரெட்டி, மாவட்ட எஸ்பி ரகுவீர ரெட்டி ஆகியோர் மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். இதையடுத்து திறன் மேம்பாட்டு நிதி மோசடி தொடர்பான வழக்கில் தங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினர்.

chandrababu naidu arrest
chandrababu naidu arrestpt desk

வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் எவ்வாறு கைது செய்வீர்கள் என்று சந்திரபாபு கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்குப் பதிவுகள் மற்றும் எப்.ஐ.ஆர் நகலை காண்பிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ரிமாண்ட் ரிப்போர்ட் கொடுக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை கைது செய்த போலீசார் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவையும் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

சந்திரபாபு நாயுடு கைது தொடர்ந்து குப்பம் பகுதியில் தெளிவு தேச கட்சி நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கைது கடைகள் அடைப்பு அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மாலானுர் பகுதியில் உள்ள சாலையில் கட்டைகளை போற்றி எரித்து சாலை மறியல் போராட்டத்தில் தெலுங்கு தேச கட்சியினர் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

AP Bus
AP Buspt desk

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது கட்சியினர் ஆந்திராவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திலிருந்து வேலூர் வழியாக ஆந்திராவுக்கு இயக்கப்படும் சுமார் 130 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com