\
ஏர் இந்தியாவை வாங்கும் போட்டியில் டாடாவுக்கே வெற்றி வாய்ப்பு

ஏர் இந்தியாவை வாங்கும் போட்டியில் டாடாவுக்கே வெற்றி வாய்ப்பு

ஏர் இந்தியாவை வாங்கும் போட்டியில் டாடாவுக்கே வெற்றி வாய்ப்பு
Published on
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா குழுமத்துக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக ஏர் இந்தியாவின் முன்னாள் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், அந்த நிறுவனத்தை விற்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் முனைப்பு காட்டாத நிலையில், டாடா குழுமமும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டின. இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமும் தீவிரம் காட்டி வருவதாகவும், எனவே அந்த குழுமத்துக்கே வெற்றி கிடைக்கும் எனவும் ஏர் இந்தியா முன்னாள் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com