
மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத்துறை முடிவுசெய்துள்ளது.
”யுனெஸ்கோ”வால் அங்கீகரிக்கப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையை பாதுகாப்பது மற்றும் அங்கு வாழும் வன உயிரிகள் மேம்பாடு குறித்து தேக்கடியில் நடைபெற்ற கேரள வனத்துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் முதற்கட்ட பயிலரங்கு நிறைவுற்றது.
இதில் மகாராஷ்டிராவில் துவங்கி குஜராத், கோவா, கர்நாடகம், தமிழகம் கேரள மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் 1,600 கி.மீ நீளமுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையை பாதுகாப்பு குறித்து முடிவுகள் செய்யப்பட்டன.
அதன்படி மலையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, மலையோர கிராமங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து மணல் குவாரிகள், கல் குவாரிகள், ஆழ்குழாய் கிணறுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து இரண்டாம்கட்ட பயிலரங்கை மூணாரில் நடத்த வனத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இன்னும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.