இந்தியாவில் வனப்பகுதி 2 ஆண்டுகளில் 1,445 சதுர கி.மீ அதிகரிப்பு
இந்தியாவில் வனப்பகுதிகளின் பரப்பளவு 2 ஆண்டுகளில் ஆயிரத்து 445 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வன கணக்கெடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021ஆம் ஆண்டு வனப்பகுதி பரப்பு 7 லட்சத்து 13 ஆயிரத்து 789 சதுர கிலோ மீட்டராக இருந்ததும் 2023 இல் அது 7 லட்சத்து 15 ஆயிரத்து 343 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தற்போது நாட்டில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 21.76 சதவீதத்திலிருந்து 25.17 சதவீதம் ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதி மிகுந்த மாநிலங்களில் மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளதாகவும் சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தானில் வனப்பரப்பு அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனங்கள் அழிவும் பருவநிலை மாற்ற பேராபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படும் நிலையில் புதிய புள்ளி விவரங்கள் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.