\
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்
Published on

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை செல்கிறார்.

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் அமைப்பான பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டம் இலங்கையில் 30ஆம் தேதி நடைபெறுகிறது. காணொளி முறையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி முறையில் உரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை செல்ல உள்ளார். பிம்ஸ்டெக் நாடுகள் அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மார், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு - எவ்வளவு தெரியுமா?

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com