இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைக்காத துறையே இல்லை - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைக்காத துறையே இல்லை - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைக்காத துறையே இல்லை - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா - அமெரிக்கா அமைச்சர்கள் மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தை நேற்றிரவு நான்காவது முறையாக நடைபெற்றது. இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைக்காத துறையே இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்னில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைசர் ஆண்டனி பிளின்கின், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் பேசிய ஜெய்சஙகர் இரு நாடுகள் உறவு, பருவநிலை நடவடிக்கை, கொரோனா, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்புக்கு இந்திய- அமெரிக்க உறவு அஸ்திவாரமாக திகழ்வதாக தெரிவித்தார். இந்த கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயல்வதாக தெரிவித்த அவர், இந்தியா-அமெரிக்கா உறவை மேம்படுத்துவதன் மூலம் அதிகார சமநிலையை உறுதி செய்யமுடியும் என கூறினார்.

இதையும் படிக்கலாம்: 'இந்த விஷயம் இல்லாமல் இந்தியாவுடன் சுமூக உறவை பேண முடியாது' - பாக். பிரதமர் ஷெபாஸ் ஷரீப்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com