\
“வேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணம்” - அதிகாரிகளை வியக்கவைத்த நூதன கடத்தல்

“வேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணம்” - அதிகாரிகளை வியக்கவைத்த நூதன கடத்தல்

“வேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணம்” - அதிகாரிகளை வியக்கவைத்த நூதன கடத்தல்
Published on

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளிடம் மத்திய நிறுவன பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த உணவுப் பொருட்களின் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர் கொண்டு வந்த உணவுகளை சோதனை செய்தனர்.

அப்போது அதிகாரிகள் வியக்கும் வகையில் வேர்க்கடலைகளுக்குள் சுருட்டி, மடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிஸ்கட் பாக்கெட்டுகளில் உள்ள பிஸ்கட்டுகளுக்குள் மறைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பணத்தையும் கைப்பற்றினர்.

இவ்வாறாக கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.45 லட்சம் எனப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com