அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேச்சுவார்த்தை

அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேச்சுவார்த்தை
அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேச்சுவார்த்தை

அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

5 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டோனி பிளிங்க்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

கொரோனா தடுப்பூசி உற்பத்தி, குவாட் அமைப்பை வலுப்படுத்துதல், பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்கள் என பல அம்சங்கள் தொடர்பாக ஜெய்சங்கர் பேசுவார் எனத் தெரிகிறது. இது தவிர அமெரிக்க தொழிலதிபர்களையும் இப்பயணத்தின்போது ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு இந்திய அமைச்சர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com