லட்சக்கணக்கான கார் தயாரிப்பு முதல் மூடல் வரை... சென்னை ஃபோர்டு நிறுவனத்தின் கடைசி கார்

லட்சக்கணக்கான கார் தயாரிப்பு முதல் மூடல் வரை... சென்னை ஃபோர்டு நிறுவனத்தின் கடைசி கார்
லட்சக்கணக்கான கார் தயாரிப்பு முதல் மூடல் வரை... சென்னை ஃபோர்டு நிறுவனத்தின் கடைசி கார்

சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் கடைசி கார் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த கார் உற்பத்தி செய்யும் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது, கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக நிர்வாகம் அறிவித்தது. அந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியையும் கலக்கத்தையும் கொடுத்தது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொழிற்சாலையை மூடக்கூடாது மற்றும் தங்களது பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஊழியர்கள், கடந்த மாதம் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டது வந்தனர். அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையில், போராட்டத்தை கைவிட்டு மீண்டும் உற்பத்தியை கடந்த 10 நாட்களுக்கு மேலாக செய்து வந்த நிலையில், ஃபோர்டு தொழிற்சாலை வருகின்ற ஜூலை மாதம் 31ஆம் தேதியுடன் மூடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படியே, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் ஃபோர்டு கார் உற்பத்தி இன்றுடன் முடிவடைந்தது.

தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கடைசி காராக `ECO-- ஸ்போர்ட்ஸ்’ காரை செய்து முடித்தது சென்னை தொழிற்சாலை. தனது கடைசி காரை தயாரித்து முடித்த போர்டு நிறுவனத்தின் காரை ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீர் மல்க தொழிற்சாலைக்கு விடை கொடுத்தனர். பல ஆயிரக்கணக்கான கார்களை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்த இந்த தொழிற்சாலை வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று மூடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com