கல்வான் தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்தனர் : முதன்முறையாக ஒப்புக்கொண்ட சீனா

கல்வான் தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்தனர் : முதன்முறையாக ஒப்புக்கொண்ட சீனா
கல்வான் தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்தனர் : முதன்முறையாக ஒப்புக்கொண்ட சீனா

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கு மோதலின் போது உயிரிழப்புகளை சந்தித்ததாக முதன்முறையாக சீனா  முதன்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது, ரெஜிமென்ட் தளபதி உட்பட நான்கு வீரர்களுக்கு இந்த மோதலில் உயிரிழந்ததாக சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில், 2020ஆம் ஆண்டு ஜூன் 15 ம் தேதி  எல்லைப்பகுதியான கால்வானில் நடந்த மோதலில் , இந்தியா-சீனா வீரர்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டனர். இதில் இந்தியா உடனடியாக 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது. 1975 க்குப் பிறகு இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்புகள் இவை. ஆனால் சீனாவின் தரப்பிலிருந்து உயிரிழப்புகள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 “கடந்த ஆண்டு ஜூன் மாதம் கால்வானில் இந்தியாவுடனான மோதலின்போது உயிரிழந்த நான்கு எல்லை வீரர்கள் தங்கள் "தியாகத்திற்காக" அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய இராணுவ ஆணையம் அறிவித்ததாக” இன்று சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மத்திய இராணுவ ஆணையத்தின் பி.எல். சின்ஜியாங் மிலிட்டரி கமாண்டின் ரெஜிமென்ட் கமாண்டரான குய் ஃபபாவோவுக்கு, 'எல்லையை பாதுகாப்பதற்கான ஹீரோ ரெஜிமென்ட் கமாண்டர்' என்ற பெருமையை வழங்கியது, மேலும் எல்லை பாதுகாப்பு நாயகர்கள் எனும் முதல் தர தகுதியை சென் சியாங்ராங், சியாவோ சியுவான் மற்றும் வாங் ஜுயோரன் ஆகிய வீரர்களுக்கு வழங்கப்பட்டதுஎன்று குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாதான் ஆக்கிரமிப்பாளர் என்று இந்திய இராணுவம் கூறியுள்ள நிலையில், “கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர மோதலின் பொறுப்பு இந்திய இராணுவத்தின் மீதுதான் உள்ளதுஎன்று சீன அரசு செய்தித்தாள் கூறியது. "இந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களின் உயிரிழப்புகள் மற்றும் விவரங்களை சீனா வெளியிட்டது இதுவே முதல் முறை" என்றும் அந்த செய்தித்தாள் கூறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com