நல்ல மருமகள், மனைவியாக வாழ்வது எப்படி? - பல்கலைக் கழகத்தில் புது படிப்பு

நல்ல மருமகள், மனைவியாக வாழ்வது எப்படி? - பல்கலைக் கழகத்தில் புது படிப்பு

நல்ல மருமகள், மனைவியாக வாழ்வது எப்படி? - பல்கலைக் கழகத்தில் புது படிப்பு
Published on

போபாலில் உள்ள பர்கதுல்லா பல்கலைக் கழகத்தில் ஒரு பெண் நல்ல மருமகளாக, மனைவியாக இருப்பதை கற்றுக் கொடுப்பதற்காக புது படிப்பு தொடங்கப்பட உள்ளது. 

2019ம் ஆண்டு முதல் இந்தப் படிப்பு தொடங்கப்படவுள்ளது. முதல் வருடத்தில் 30 இடங்கள் இந்தப் படிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக சேவை, உளவியல் மற்றும் பெண்கள் பாதுகாப்புத்துறை சார்பில் இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு உடைபடாமல் ஒற்றுமையுடன் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இப்படிப்பை தொடங்கியுள்ளதாக பர்கதுல்லா பல்கலைக் கழகம் கூறுகிறது. 

“இது மூன்று மாத படிப்பு. ஆண்கள், பெண்கள் இருபாலரும் இதில் பங்கு பெறலாம். பிளஸ்-2 படிப்பு இதற்கு தகுதியானது. வயது வரம்பு எதுவுமில்லை. சமுதாயத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொருட்டு இந்தப் படிப்பை தொடங்கவுள்ளோம். இளைய தலைமுறை இளைஞர்களுக்கு இது உதவும்” என்கிறார் பர்கதுல்லா பல்கலைக் கழக துணை வேந்தர் குப்தா. 

இந்தப் படிப்பு குறித்த தகவல் வெளியான பின்னர், ‘பெண்களுக்கு மட்டும் ஏன் இந்தப் படிப்பு?’ , ‘படிப்பு ஆபாசமாக இருக்கும்’ என்பது உள்ளிட்ட சில விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்தப் படிப்பில் பர்கதுல்லா சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதாவது, ஆண்கள் மற்றும் பெண்கள் இருதரப்பினருக்கும் சிக்கல் இல்லாமல் மாற்றம் செய்யப்பட்டது. நல்ல கணவன், மனைவியாக, நல்ல மாமியார், மாமனாராக இருப்பது எப்படி? என்ற அடிப்படையில் பாடத்திட்டங்களை உருவாக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com