தந்திரி கண்டரரு ராஜீவரு வேண்டுகோள்pt desk
இந்தியா
ஐயப்பனுக்கு விரதம் இருப்பதற்கு இணையானது சுற்றுப்புறச் சூழல் தூய்மை - தந்திரி கண்டரரு ராஜீவரு
சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருப்பதற்கு இணையானது சுற்றுப்புறச் சூழல் தூய்மை. அதில் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் கவனம் செலுத்த வேண்டியது கடமை என சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்தது தேக்கடி பெரியாறு காப்பகம். புலிகள் காப்பகத்தின் ஆயிரக்கணக்கான வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள 18 மலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்.
Sabarimalaifile
இயற்கையின் சுற்றுப்புறச் சூழலை காப்பாற்றவும், வன உயிரினங்களை பாதுகாக்கவும் ஐயப்ப பக்தர்கள் நெகிழி கழிவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் இந்த நெகிழி பொருட்களை "இருமுடி" கட்டிலும் தவிர்க்க வேண்டும்.
தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் முடித்து திரும்புகின்றனர். சபரிமலை விஷயத்தில் அரசிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.