இந்தியா
ஆரோக்கிய உணவு ரகங்களுக்கு மாறிய குடும்பநல அமைச்சகம்
ஆரோக்கிய உணவு ரகங்களுக்கு மாறிய குடும்பநல அமைச்சகம்
மத்திய குடும்பநல அமைச்சகத்தின் கேன்டீனில் எண்ணெயில் பொறித்த உணவுகள் கைவிடப்பட்டுள்ளன. மாறாக, சிறுதானிய புலாவ், பச்சைப்பட்டாணி காய்கறி ரோல், சிறுதானிய ரொட்டி ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.
சமோசா, பக்கோடா, சிப்ஸ் ஆகியவை குடும்பநல அமைச்சக கேன்டீனில் இருந்து மறைந்துள்ளன. ஊட்டச்சத்துகள் மிக்க புதிய ரகங்களுடன் காலை சிற்றுண்டி 25 ரூபாயாகவும் மதிய உணவு 40 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரவேற்பைப் பொறுத்து மேலும் ஆரோக்கிய உணவு ரகங்கள் மெனுவில் சேர்க்கப்படும் என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: இரட்டைக் குழந்தைக்குக் கிடைத்த வரம்! - தினேஷ் கார்த்திக், தீபிகா நெகிழ்ச்சி