ரயில் உணவுகளில் எடை, தேதி விவரம்

ரயில் உணவுகளில் எடை, தேதி விவரம்

ரயில் உணவுகளில் எடை, தேதி விவரம்
Published on

ரயில்களில் வழங்கப்படும் உணவுகளில் அவற்றின் அளவு மற்றும் அதன் விநியோகஸ்தர் விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் அனைத்து ரயில்வே மண்டல பொதுமேலாளர்களுக்கும் இது குறித்து அவர் கடிதம் எழுதியுள்ளார். தற்போது பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் சைவமா, அசைவமா என்பதை குறிக்கும் அடையாளம் மட்டுமே உள்ள நிலையில் இனி தயாரிப்பு தேதி, எடை, விநியோகஸ்தர் பெயர் உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற வேண்டும் அக்கடிதத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார். ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புகார்கள் புகார்கள் இருந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கையை அமைச்சர் எடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com