தேநீர் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை முக்கிய உத்தரவுweb
இந்தியா
நீங்கள் தேநீர் குடிப்பவரா? தேநீர் விற்பனையாளரா?.. உணவு பாதுகாப்புத் துறை முக்கிய உத்தர்வு!
தேயிலைலிருந்து பெறப்படும் பானங்களை தவிர மற்ற மூலிகை கலவைகளை தேநீர் என்று விற்கக்கூடாது என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தேயிலைச் செடியிலிருந்து தயாரிக்கப்படாத மூலிகை பானங்களை தேநீர் என்ற பெயரில் விற்பனைசெய்யக்கூடாது என்று இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேநீர் - காபி முகநூல்
தேயிலைத் தாவரத்திலிருந்து பெறப்படும் பானங்கள் மட்டுமே தேநீர் என்று அழைக்கப்பட வேண்டும், மாறாக பூக்கள் அல்லது மூலிகைக் கலவைகளை தேநீர் என்று விற்பனை செய்யக்கூடாது. அப்படி செய்வது நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் செயல் என்றும், இது தவறான முத்திரை இடுதல் சட்டத்தின் கீழ் வரும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
மூலிகை தேநீர்
மின் வணிகத்தளங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் உடனடியாக பானங்களின் உண்மையான தன்மையைக் குறிக்கும் பெயர்களையே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

