இந்தியா
டெல்லியில் நீடிக்கும் பனிப்பொழிவு... பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு
டெல்லியில் நீடிக்கும் பனிப்பொழிவு... பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள வட மத்திய மாநிலங்களில் இன்றும் கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாகவே, பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, டெல்லியில் 7 சர்வதேச விமானங்கள் தரையிறங்க முடியாமல் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. பனியால் பாதை தெரியாத காரணத்தால் 41 ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு தாமதமாகியுள்ளன.
இதனிடையே, நடைபாதை வாசிகளும் கடும் பனி காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களும், இரு சக்கர ஓட்டிகளும் அதிகாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படுவதால் வெளியே வர தயக்கம் காட்டுகின்றனர்.