\
காந்தியின் 6 அடி உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை

காந்தியின் 6 அடி உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை

காந்தியின் 6 அடி உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை
Published on: 

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி குமுளியில் காந்தியின் 6 அடி உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீருமேடு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குமுளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை ஒட்டி, குமுளி பேருந்து நிலைய பொதுமேடையில் காந்திஜியின் ஆறடி உருவ படம் வைக்கப்பட்டு, அதற்கு விளக்கேற்றப்பட்டது. குமுளி ஊராட்சி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் காந்திஜியின் சாதனைகள் குறித்தும், பொதுவாழ்வில் அவரது வாழ்க்கையை பாடமாக எடுத்துக்கொள்வது குறித்தும் விளக்கி பேசினர். ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்வில் காந்திஜிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com