வெள்ளத்தில் மிதக்கும் உ.பி மற்றும் உத்தராகண்ட்... மக்கள் அவதி
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் நெடுஞ்சாலை ஒன்றில் வெள்ளம் காரணமாக திடீர் என சாலை அரிப்பு ஏற்பட்டது. இதனால் சாலை சரிந்ததில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. ஒரு காரை வெளியே எடுக்க முடியாமல் அதன் ஓட்டுநர் தடுமாறினார்.
Read Also -> கேரளாவுக்கு உதவிய கேன்சர் பாதித்த பிச்சைக்காரர்!
உத்தரபிரதேச மாநிலத்தில் லலித்பூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் செல்லும் ஆற்றில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 7 பேர் சிக்கிக்கொண்டனர். இதனையறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் ஹெலிக்காப்டர் உதவியுடன் ஆற்றில் சிக்கிய 7 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்சென்றனர். வெள்ளம் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக அவதியுற்றுள்ளனர்.