சர்ச்சையாகும் முஸ்லிம் மாணவிகளின் ’ஜிமிக்கி கம்மல்’ டான்ஸ்!

சர்ச்சையாகும் முஸ்லிம் மாணவிகளின் ’ஜிமிக்கி கம்மல்’ டான்ஸ்!

சர்ச்சையாகும் முஸ்லிம் மாணவிகளின் ’ஜிமிக்கி கம்மல்’ டான்ஸ்!
Published on

கேரளாவில் நடுரோட்டில் முஸ்லிம் மாணவிகள் ஆடிய ’ஜிமிக்கி கம்மல்’ பாடல் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 

மோகன்லால் நடிப்பில் லால் ஜோஷ் இயக்கிய மலையாள படம், ’வெளிப்படின்டே புஸ்தகம்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ’ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடல் நாடு முழுவதும் பிரபலமானது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் தாங்களாகவே ஆடியும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் கேரளாவின் மலப்புரத்தில், பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் 3 பேர், நடுரோட்டில் இந்தப் பாடலுக்கு ஆடியுள்ளனர். பர்கா, ஜீன்ஸ் அணிந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக இவர்கள் ஆடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக அவர்கள் உடை அணிந்திருப்பதாகவும் இது கண்டிக்கத்தக்கது என்றும் சிலர் கடுமையாக சாடியுள்ளனர். அதே நேரம் அந்த மாணவிகளுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com