சுற்றுலாப் பயணிகளுக்காக கோவாவில் நூறுசதவீத மின்சார பேருந்து பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக அழகான மாநிலம் கோவா. வரலாற்று பாரம்பர்யம் மிக்க மாநிலம். அங்கு இன்று நடைபெற்ற விழா ஒன்றில் மாநிலத்தின் முதல்வர் மனோகர் பாரிக்கர் 100 சதவீத மின்சார பேருந்து பயணத்தை தொடங்கி வைத்துள்ளார். அதற்கான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள முதல்வர், “ நூறுசதவீதம் மின்சாரத்தினால் இயங்கக் கூடிய ’கடம்பா’பேருந்து பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இது சுற்றுப்புற சூழலுக்கு உகந்தப் பயணத்தை கவனத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான பேருந்து இது ” என்று தெருவித்துள்ளார்.