\
பைக்கில் சென்றவர் வெட்டிக் கொலை: பழிக்குப் பழி காரணமா..?

பைக்கில் சென்றவர் வெட்டிக் கொலை: பழிக்குப் பழி காரணமா..?

பைக்கில் சென்றவர் வெட்டிக் கொலை: பழிக்குப் பழி காரணமா..?
Published on

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மீனவரை மர்ம கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏர்படுத்தி உள்ளது.

புதுச்சேரி, குருசுகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன் (50). பொதுப்பணித்துறை ஊழியாரன இவர் மீன்பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இதனிடையே இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் குருசுகுப்பம் மாதா கோயில் அருகே வந்துகொண்டிருந்த போது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் மடக்கி பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனர்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் மாறன் கொலைக்கு பழிக்குப் பழியாக மாறன் மகன்கள் கோகுல், ராகுல், சூர்யா மற்றும் சதீஷ், வினோத், 2 சிறுவர்கள் என மொத்தம் 7 பேர் சேர்ந்து லோகநாதனை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com