\
தமிழக மீனவர்கள் பிரச்னை... இந்திய - இலங்கை அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் பிரச்னை... இந்திய - இலங்கை அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் பிரச்னை... இந்திய - இலங்கை அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை
Published on

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் மீனவர் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியக்குழு இலங்கை புறப்பட்டுள்ளது.

இலங்கை அரசால் தமிழக மீனவர்களின் படகுகள் நாட்டுடைமை ஆக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாகும் விவகாரம், இழுவை மீன்பிடி வலைகள் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து முக்கியமாக பேசப்படவுள்ளது.

பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், தமிழக மீன்வளத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடி, மீன்வளத்துறை இயக்குனர் அந்தோணி சேவியர் உள்ளிட்டோர் இலங்கை சென்றுள்ளனர். முன்னதாக இந்தியா - இலங்கை இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com