ஒடிசா வரலாற்றில் முதல்முறையாக இஸ்லாமியப் பெண் எம்.எல்.ஏ தேர்வு! எந்த கட்சிக்கு தெரியுமா?

ஒடிசா வரலாற்றில் முதல்முறையாக இஸ்லாமியப் பெண் ஒருவர் எம்.எல். ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சோஃபியா ஃபிர்தெளஸ்
சோஃபியா ஃபிர்தெளஸ்முகநூல்

ஒடிசா வரலாற்றில் முதல்முறையாக இஸ்லாமியப் பெண் ஒருவர் எம்.எல். ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக் கு வந்துள்ளது. இங்கு பாஜக முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில், பாராபதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சோஃபியா பிர்தவுஸ் வென்றுள்ளார். இதன்மூலம் ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்வான முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையையும் சோஃபியா ஃபிர்தெளஸ் பெற்றுள்ளார்.

சோஃபியா ஃபிர்தெளஸ்
சோஃபியா ஃபிர்தெளஸ்
சோஃபியா ஃபிர்தெளஸ்
மக்களவையில் மீண்டும் எதிர்க்கட்சியாக காங்கிரஸ்.. எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரங்கள் என்னென்ன?

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பூர்ண சந்திர மகாபத்ராவைவிட சுமார் 8ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிவாகை சூடி உள்ளார். சோஃபியா பிர்தவுஸின் தந்தை, ஒடிசா காங்கிரஸின் மூத்த தலைவரான முகமது மொகிம் ஆவார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியில் அவரது மகள் தற்போது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com