\
விமானப் படையின் முதல் பெண் அதிகாரி காலமானார்

விமானப் படையின் முதல் பெண் அதிகாரி காலமானார்

விமானப் படையின் முதல் பெண் அதிகாரி காலமானார்
Published on

இந்திய விமானப்படையில் முதல் பெண் விங் கமாண்டரான விஜயலக்ஷமி ரமணன் காலமானார். அவருக்கு வயது 96.

1924 ஆம் ஆண்டு பிறந்த விஜயலக்ஷமி, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பை முடித்தார். 1955 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்து பெங்களூரு, கான்பூர், செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய அவர், ரமணன் என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்துவந்தார்.

வ‌யது முதிர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். இந்தோ- சீனா போர், பாகிஸ்தானுடனான இரண்டு போர்களில் விஜயலக்ஷமி ரமணன் முக்கிய பங்காற்றியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com