மேற்குவங்க இளம் பெண் எம்.பிக்கு துருக்கியில் திருமணம்!

மேற்குவங்க இளம் பெண் எம்.பிக்கு துருக்கியில் திருமணம்!

மேற்குவங்க இளம் பெண் எம்.பிக்கு துருக்கியில் திருமணம்!
Published on

மேற்கு வங்க மாநில இளம் பெண் எம்.பியும் நடிகையுமான நுஸ்ரத் ஜஹான், தனது காதலரை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

பிரபல வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரும் பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயினும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் நேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணம் துருக்கியில் உள்ள போட்ரம் என்ற இடத்தில் நடந்தது. இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டனர்.

மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு இளம் எம்.பியும் நடிகையுமான மிமி சக்ரவர்த்தியும் இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டார். 

திருமணம் காரணமாக நுஸ்ரத், எம்.பியாக இன்னும் பதவியேற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com