உ.பி: ஸ்வர்ட்டர் அணியாமல் கடும்குளிரில் மாணவர்கள் யோகா?: செய்திவெளியிட்டவர் மீது எஃப்.ஐஆர்
உத்திரபிரதேச அரசு விழாவில் ஸ்வர்ட்டர் கூட அணியாமல் கடும் குளிரில் யோகாசனம் செய்த பள்ளி மாணவர்களின் நிலையை செய்தியாக பகிர்ந்தமைக்காக மூன்று பத்திரிகையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிறு அன்று உத்திர பிரதேச மாநிலம் உருவான நாள் என்பதால் அம்மாநில அரசு பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிலவி வரும் கடுமையான குளிரையும் தாங்கிய படி ஸ்வர்ட்டர் கூட அணியாமல், வெயில் காலங்களில் அணியக்கூடிய சீருடையை அணிந்தபடி யோகாசனம் செய்துள்ளனர்.
இதனை செய்தியாக அந்த மாநில உள்ளூர் பத்திரிகையாளர்கள் பகிர்ந்துள்ளனர். அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினனார்கள் குளிரை தாங்கக்கூடிய ஆடைகளை அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நிகழ்ச்சி நடந்த இடத்தில் அந்த செய்தியை பகிர்ந்த பத்திரிகையாளர்கள் அந்த இடத்திற்கு வரவே இல்லை என குற்றம் சாட்டியதோடு மக்களிடத்தில் அவதூறு செய்தியை பகிர்ந்ததாகவும் போலீசில் புகார் அளித்திருந்தார் கான்பூரை சேர்ந்த கல்வி அதிகாரி சுனில் டட்டா.
அதோடு உடற்பயிற்சி செய்து காட்டுவதற்காக மாணவர்கள் குளிர்கால ஆடைகளை கழட்டியதாகவும் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். ஸ்வர்ட்டர் கூட இல்லாமல் மாணவர்களை யோகா செய்ய பணிப்பதில் எந்த நிர்பந்தமும் இல்லை என குற்றம் சாட்டப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : NDTV