இந்தியா
எப்போது முடியும் தண்ணீர்க்குள் செல்லும் மெட்ரோ ரயில் திட்டம்? - அதிகாரிகள் விளக்கம்
எப்போது முடியும் தண்ணீர்க்குள் செல்லும் மெட்ரோ ரயில் திட்டம்? - அதிகாரிகள் விளக்கம்
நாட்டிலேயே முதல் முதலாக தண்ணீர்க்குள் செல்லும் மெட்ரோ ரயில் சேவை இன்னும் ஒரு ஆண்டுக் காலத்தில் நிறைவடைந்து விடும் எனக் கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே முதல் முதலாக தண்ணீர்க்குள் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் சேவையைச் செயல்படுத்தக் கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வந்தது.
சுரங்கப்பாதையின் உள் சுவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் உள்ளே வராத நிலையெல்லாம் சரி பார்த்துக் கட்டப்பட்டுள்ளது.
ஒரு கிலோமீட்டருக்கு 120 கோடி ரூபாய் என்ற வீதத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்பொழுது கிலோமீட்டருக்கு 157 கோடி ரூபாய் என்ற வீதம் அதிகரித்தது. தற்பொழுது முதல் கட்டமாக சுமார் 520 மீட்டர் நீளமுள்ள சுரங்கம் என்பது ஹூக்ளி நதிக்கு உள்ளே கட்டப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பெருமளவில் பலன் அளிக்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.