சிஏஏவுக்கு எதிரான போராட்டக் களத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு..!

சிஏஏவுக்கு எதிரான போராட்டக் களத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு..!

சிஏஏவுக்கு எதிரான போராட்டக் களத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு..!
Published on

டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் இன்று சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது திடீரென ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஜசோலா ரெட் லைட் என்ற இடம் அருகே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து விவரங்கள் தெரியவில்லை.

இதேபோல கடந்த சில நாள்களுக்கு முன்பு டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோபால் என்ற 17 வயது இளைஞர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com