சாக்கடையில் மயங்கி விழுந்து தீயணைப்பு அலுவலர் உயிரிழப்பு - சத்தியமங்கலத்தில் சோகம்

சாக்கடையில் மயங்கி விழுந்து தீயணைப்பு அலுவலர் உயிரிழப்பு - சத்தியமங்கலத்தில் சோகம்

சாக்கடையில் மயங்கி விழுந்து தீயணைப்பு அலுவலர் உயிரிழப்பு - சத்தியமங்கலத்தில் சோகம்
Published on

சத்தியமங்கலத்தில் சாக்கடையில் விழுந்து தீயணைப்பு நிலைய அலுவலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இன்று அதிகாலை, சக்திவேல் வீட்டிலிருந்து பணிக்காக தீயணைப்பு நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, வழியில் அவருக்கு மயக்கம் வருவதை போல் உணர்ந்திருக்கிறார். இதையடுத்து, சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பதற்காக வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்.

ஆனால், சிறிது நேரத்தில் மயங்கிய சக்திவேல், இருசக்கர வாகனத்துடன் அருகிலிருந்த சாக்கடைக் குழிக்குள் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், சிறிது நேரம் கழித்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், சாக்கடைக்குள் விழுந்து கிடந்த சக்திவேலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் இருசக்கர வாகனத்தில் சாக்கடைக்குள் மயங்கி விழுந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com