மேற்கு வங்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டேங்கர் லாரிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்கு உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் நேற்றிரவு திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பரவி மற்ற 7 லாரிகளும் தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.