மும்பை தீ விபத்து: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

மும்பை தீ விபத்து: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

மும்பை தீ விபத்து: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
Published on

மும்பையில் தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லோவர் பேரல் என்ற இடத்தில் உள்ள கமலா மில்ஸ் அடுக்குமாடி கட்டட வளாகத்தில் இருந்த உணவகத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கு காரணமாக இருந்ததாக கூறி உணவக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். விரைவாக மீட்பு பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு படையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com