\
அசாம் தலைமை செயலகத்தில் தீ

அசாம் தலைமை செயலகத்தில் தீ

அசாம் தலைமை செயலகத்தில் தீ
Published on: 

அசாம் தலைமைச் செயலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலம் குவஹாத்தியில் அமைந்துள்ள தலைமை செயலகமான ஜனதா பவனின் அடுக்குமாடி அறையில் எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட அறைகளில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் எரிந்து விட்டதா என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ பற்றி இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com