\
மகாராஷ்டிரா கெமிக்கல் குடோனில் தீ விபத்து 

மகாராஷ்டிரா கெமிக்கல் குடோனில் தீ விபத்து 

மகாராஷ்டிரா கெமிக்கல் குடோனில் தீ விபத்து 
Published on: 

மகாராஷ்டிரா மாநிலம் பிவான்டியில் உள்ள கெமிக்கல் குடோனில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சேதம் குறித்தும் இறப்பு குறித்தும் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இதேபோல், மும்பை, பாந்த்ரா புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள எம்டிஎன்எல் தொலைபேசி இயக்கக கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அறையில் இருந்தவர்கள் தங்களை காத்துக்கொள்ள மொட்டைமாடியில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து 14 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து கட்டடத்தில் சிக்கியிருந்த 100-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தீயை அணைக்கும் ரோபோவும் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com