ஹைதராபாத் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து
ஹைதராபாத் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்துமுகநூல்

ஹைதராபாத் | சட்டவிரோதமாக இயங்கிவந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!

ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
Published on

ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதை தவிர வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் பட்டாசுக் கடைக்கு அருகில் இருந்த உணவகம் முழுவதுமாக தீ விபத்தினால் சேதமடைந்தது.

அதேபோல் 8 கார்களுக்கும் தீ பரவி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. தீ வேகமாக பரவியதால் தீயணைப்புத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகே தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. முறையான சான்றிதழ் பெறாமல் பட்டாசுக் கடை நடத்தப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹைதராபாத் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து
தவெக மாநாட்டு திடல்: அலை அலையாய் குவிந்து வரும் தொண்டர்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com