டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக முதல் மற்றும் 2வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 22 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் யாருக்காவது காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.